நீலகிரி மாவட்டம் ஊட்டி
ரவிக்குமார் தினேஷ்
07-06-2025
உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். உதகைக்கு நாளுக்கு நாள் இங்கு சுற்றுலா வருவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறுகிய நகரமான உதகையில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்களில் உதகையை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர்வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் கடுமையாக அவதியுறும் உதகை சாலைகள் தற்போது கால்நடைகளால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, புருமவுண்டன், வர்த்தக சாலையான கமர்சியல் சாலை, ஏடிசி சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் நடுவே திடீரென வரும் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் சில நேரங்களில் மாடுகள் பொதுமக்களை தாக்குவதற்கு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மேலும் தோடர் பழங்குடியினர் மக்கள் வளர்க்கும் எருமைகள் சாலைகளின் நடுவே அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.