நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதை இன்றி தவிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்.
ஏடிசி மத்திய பேருந்து நிலையம் பிரதான சாலையில் நகரத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை கோழி கழிவுகள் மற்றும் மதுபான பாட்டில்கல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.
மேலும் இந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளும் வாகனங்களில் அமர முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் அவளியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதி ஓட்டுநர்கள் இயற்கைக்கு சாதகமாக பல்வேறு மரங்களை நடவு செய்தும் பொதுமக்களின் சீர்கேடு செயல்களால் அந்த மரங்கள் அனைத்தும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் எனவும் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுத்தால் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் நடைபாதைகள் சீராக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.