உதகையில் இன்று காவல்த்துறையினர் கொடி அணிவகுப்பு

77பார்த்தது
விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் வரும் 8 மற்றும் 11-ஆம் தேதி நடைப்பெறுவதை ஒட்டி உதகையில் இன்று காவல்த்துறையினர் கொடி அணிவகுப்பு எவ்வித அசம்பாவிதங்களும் நடைப்பெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் தகவல்.

நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 8 மற்றும் 11ம் தேதி இந்து பர்சத், சிவசேனா மற்றும் இந்து முன்னணி சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைப்பெறவுள்ளது. இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இதில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைப்பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக உதகையில் இன்று மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா  தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்ப்பட்ட காவல்த்துறையினர் அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் இருந்து சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் சதுக்கம் போன்ற நகரின முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேரூந்து நிலையம் வரை கொடி அணி வகுப்பு நடைப்பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி