பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே வாளவயல் பகுதியை சேர்ந்தவர் திராவிடசெல்வன். இவருடைய மகள் உமா (வயது 17). பிதிர்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நோயால் அவதிப்பட்டு வந்த மாணவி சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த நெலாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்கு பந்தலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.