20 நாட்களாக குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள்...

84பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு விவேகானந்தா நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிர்த்து வருவதாகவும் பார்சல் வேலி பகுதியில் குடிநீர் விநியோகம் மோட்டார் திடீரென பழுதடைந்ததால் உதகையில் உள்ள பல பகுதியில் பொது மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும்

சுமார் 20 நாட்களாகவே ஏழாவது வார்டு விவேகானந்தர் பகுதியில் இந்த பிரச்சனை நீடித்து வருவதால் அப்பகுதி குடிமக்கள் குடிநீர் தேவைக்காக தண்ணி லாரிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றன

பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி துறையின் செயல்பாடு உறக்கத்திலேயே உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றன தண்ணீர் லாரிகளில் குடி தண்ணீர் தருவதை மட்டுமே கவனத்தில் கொள்ளும் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வாக மோட்டார் வாங்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்

மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களது பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு விரைந்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தராவிட்டால் அனைவரும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி