தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்பு முடித்த 21 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சிக்கான செலவு மற்றும் விடுதி வசதி ஆகியவற்றை தாட்கோ ஏற்கும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த இலவச பயிற்சியானது, அரசுப் பணியை நோக்கி பயணிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.