ஊட்டி: பூண்டு விலை கடும் சரிவு-விவசாயிகள் கவலை!

77பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் விளையும் தரமான ஊட்டி பூண்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், விவசாயிகள் ஊட்டி பூண்டு உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டி பூண்டு விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஊட்டி பூண்டு விலை அதிகரித்ததால், பூண்டு சாகுபடியில் பலர் ஆர்வம் காட்டினர். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பூண்டு 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால், தற்போது மேட்டுப்பாளையம் ஏலத்தில் ஒரு கிலோ பூண்டு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. இதனால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி