ஊட்டி பூண்டு கிடு கிடு விலை உயர்வு

82பார்த்தது
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலை தோட்ட காய்கறிகளான வெள்ளைப்பூண்டு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி,   முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகள் உதகை நகராட்சி சந்தையில் உள்ள காய்கறி மண்டிகளுக்கும், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்துச் சென்று ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஊட்டி வெள்ளைப்பூண்டு வரத்து குறைவாக உள்ளதாலும், விதைகளுக்காக விவசாயிகள் வாங்கி செல்வதால் வெள்ளைப்பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஊட்டி வெள்ளைப் பூண்டில் அதிக காரத்தன்மை மற்றும் மனமும் இருக்கும். இதனால் வட மாநில விவசாயிகள் ஊட்டி வெள்ளை பூண்டை விதைக்காக வாங்கி செல்வதால் ஊட்டி பூண்டின் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் தர ஊட்டி வெள்ளை பூண்டு தற்போது உதகையில் 500 முதல் 650 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் ஊட்டி வெள்ளை பூண்டு ஆயிரம் ரூபாய்க்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி