ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர்,
இதில் சுற்றுலாப் பயணிகள் வரவிட்டால், ஹோட்டல் தொழில் பாதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூரியகாந்த் அமர்வு ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை.
அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர் நீதிமன்றம் விதித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தை நாட அனுமதித்து, மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து முடித்து வைத்தனர்.