நீலகிரி: புலி தாக்கி ஒருவர் பலி

69பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கவர்னர் சோலை பகுதியில் தோடர் இன மக்கள் வசிக்கும் கல்லக்கொரை மந்து உள்ளது. இந்த மந்து பகுதியை சேர்ந்த கேந்தர் குட்டன் (42) என்பவர் நேற்று (மார்ச் 26) மாலை அருகேயுள்ள கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். 

இரவு முழுவதும் கேந்தர் குட்டன் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் தேடியுள்ளனர். அப்போது கேந்தர் குட்டன் புலி தாக்கி பாதி உடம்பு சாப்பிட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வனத்துறை, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட வன அதிகாரி தலைமையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.