நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதனால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரம் சிறுத்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பந்தலூர் செம்மண் வயல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் இறந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். அதில் ஒன்பது மாதங்களான சிறுத்தை இறந்திருப்பதாகவும், மற்ற விலங்குடன் சண்டையிட்டு சிறுத்தை இறந்ததா? அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சிறுத்தையின் உடல் அந்தப் பகுதியிலேயே எரியூட்டப்பட்டது. சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.