நீலகிரி: நடு இரவில் ஏற்பட்ட தீ விபத்து

61பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மலமலவென பரவி வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு தினசரி சந்தை, ஜவுளி வியாபாரம், வீட்டு உபயோக பொருட்கள் என எண்ணற்ற கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று (மார்ச் 26) திடீரென நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு துணி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 

துணி கடையில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது தீவிரமாக எரிந்து வரும் நிலையில், சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். குறிப்பாக அதிக அளவில் கடைகள் உள்ளதால் தீயானது அருகில் இருக்கக்கூடிய கடைகளுக்கும் பரவி வருகிறது. இந்த நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் அருகில் இருக்கக்கூடிய தீயணைப்பு நிலையங்களையும் நாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி