தென்மேற்கு வங்கக்கடல், வடதமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஏப்ரல் 3) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.