நீலகிரி ரயில் நிலையம் முற்றுகை...

67பார்த்தது
உதகையில் மத்திய அரசு கொண்டு முப்பெரும் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து நீலகிரி வழக்கறிஞர் சங்கத்தினர் மலை ரயில் நிலையம் முற்றுகை.

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள 3 சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என புதிய சட்டங்களின் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி , புதிய சட்டங்கள் அமல்படுத்துவதை கண்டித்தும் மத்திய அரசிற்கு எதிராக  நீலகிரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உதகையில் உள்ள மலை ரயில் நிலையத்தின் முன்பாக ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதியில் இருந்து வருகை தந்த வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் மலை ரயில் நிலையத்திற்கு வருகை தந்து ரயில்வே நுழைவாயில் முன்பாக கூடி மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய சட்டங்களை திரும்ப பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி