நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர்.
பேரிடர் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கன மழை எச்சரிக்கை திரும்பப்பெறும் வரையில் மீட்பு குழுவினர் நீலகிரியில் முகாமிட்டிருப்பர் என்பது குறிப்பிடப்படத்தக்கது.