நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் நலிந்த கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தகுதியுள்ள கலைஞர்கள் தங்கள் கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தாரை அணுகி, தங்களது விவரங்களையும், கலை தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவித் திட்டம் நலிந்த கலைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, நலிந்த கலைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் நிதியுதவித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வயோதிக கலைஞர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு மாதந்தோறும் ரூ. 3,000 நிதியுதவி வழங்கப்படும். ஒருவேளை நிதியுதவி பெறும் கலைஞர் இறந்துவிட்டால், அந்த உதவி அவர்களின் வாரிசுதாரருக்கு மாற்றப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.