கேரட் விலை கிடு கிடு உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி ஆகும் கேரட் கடந்த வாரங்களில் ரூபாய் 15 மற்றும் 20 க்கு விற்பனையானது. தொடர் கேரட் விலை சரிவால் கேரட்டை தரையில் கொட்டும் அவல நிலையும் ஏற்பட்டது.
தற்பொழுது தொடர் மழையின் காரணமாகவும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாலும் நீலகிரி கேரட் ரூபாய் 85 வரை விற்பனையாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் கனமழையின் காரணமாக விவசாய நிலங்களில் கேரட் பாதிக்கப்பட்டதாலும் வரத்து குறைந்துள்ளதாலும் திடீரென கேரட் விலை உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி ஆகும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டி மற்றும் சென்னை கேரளா போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை உயர்ந்துள்ளது.