நீலகிரி: அடுத்தடுத்து விழுந்த மரங்கள்; போக்குவரத்து பாதிப்பு

60பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில் இன்று (ஜூன் 1) நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் உதகை அடுத்த லவ்டேல் பகுதியில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரத்தினை அகற்றி சாலையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி