கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் குஞ்சபானை ஊராட்சிக்கு உட்பட்ட காக்காகூண்டு மற்றும் கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தாலாமூக்கை பகுதியில் உள்ள பழங்குடியினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌஷிக் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.