நீலகிரி: வெண்மை ஆடையில் ஜொலிக்கும் அம்மன் பக்தர்கள் சாமி தரிசனம்

56பார்த்தது
வெண்மை ஆடையில் ஜொலிக்கும் அம்மன் சித்திரை தேர் திருவிழா கோலாகலம். ஊட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம், பூச்சொரிதல் உற்சவத்துடன் விழா துவங்கியது. பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்த திருத்தேர் ஊர்வலத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' என்று கோஷங்கள் முழங்கி அம்மனை வணங்கி சென்றனர். மேலும் பக்தர்கள் பசியாற்ற பல இடங்களில் அன்னதானங்கள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி