உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் இன்று (ஏப்ரல் 1) முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் அமலுக்கு வந்துள்ளது. இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பதிவு செய்த பின்பு நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 6000 வாகனங்கள் வாரஇறுதி நாட்களில் 8000 வாகனங்கள் நீலகிரிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறைக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளை (ஏப்ரல் 2) கடையடைப்பு, பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா வாகனங்களும் நாளை (ஏப்ரல் 2) இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.