நெடுகுளா சமுதாயக் கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

65பார்த்தது
நெடுகுளா சமுதாயக் கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.
இதில் 15 துறைகளை சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள் தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்களின் குறைகளை நேரில் மனுக்களாகப் பெற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற தலைப்பில் அனைத்து துறை அதிகாரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனுக்குடன் தீர்வு காண உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட நெடுகுளா கிராமத்தில் நெடுகுளா ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாசிவா தலைமையில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் முன்னிலைமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 15 அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் மூலம் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை, தொழில் மையம் குறித்தும், தாட்கோ, சமூக நலத்துறை மூலம் பயணாகளுக்கு தையல் இயந்திரம் வழங்குவது குறித்தும் பயணாளிகளுக்கு எடுத்துக்கூறி மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்புடைய செய்தி