நீலகிரி: வீட்டுக்குள் புகுந்த காட்டு மாடு; பரபரப்பு சிசிடிவி காட்சி

69பார்த்தது
நீலகிரி மாவட்டம் 65% சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம். இங்கு மான், சிறுத்தை, காட்டுமாடு, புலி போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலாவருவது வாடிக்கையாக உள்ளது. 

இந்நிலையில் உதகை அடுத்த பிங்கர் போஸ்ட் பகுதியில் குடியிருக்கும் வீட்டுக்குள் காட்டுமாடு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் அச்சம் அடைந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி