ரொம் பசியாஇருக்கே நோட்டமிடும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி

66பார்த்தது
ரொம்ப பசியா இருக்கே சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என்று நோட்டமிடும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி.

நாயை கவ்விபிடித்த இடத்திலேயே மீண்டும் நோட்டமிட்டு உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள கல்லக்கொரை கிராமத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் சிறுத்தை ஒன்று வீட்டின் மாடியில் கட்டி வைக்கப்பட்டு இருந்து வளர்ப்பு நாயை கவ்வி பிடித்து சென்று அச்சத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை சுற்றி வேலி அமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். அந்த கண்காணிப்பு கேமராவில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வந்துள்ளது.

மீண்டும் சிறுத்தை அந்த வீட்டில் உள்ள கம்பி வேலையின் அருகாமையில் நின்று நோட்டமிட்டு வரும் சிசிடிவி காட்சி கண்டு பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர்

மேலும் கிராமத்திற்கு செல்ல பேருந்து வசதி இல்லாத கிராமமாக இருப்பதினால் பொதுமக்கள் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். நடத்துச் செல்லும் பொது மக்களுக்கு தினம் தோறும் சிறுத்தைகள் உலாவும் காட்சிகளை கண்டு பீதி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து ஒரே பாதையில் மூன்று தினங்களுக்கு மேலாக உலாவி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி