முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

58பார்த்தது
முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப் பிக்கலாம். கல்லூரி முதல்வர் ராமலட்சுமி கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் கல்வியாண்டில் முதுநிலை (பிஜி. , ) படிப் புகளில் சேர www. tngasa. in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 7ம் தேதி ஆகும். மேற்கண்ட நாட்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு ஊட்டி அரசு கலை கல்லூரி கலையரங்க கட்டிடத்தில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு ஏதுவும் சந்தேகம் இருப்பின் 'உதவி மையத்தை காலை 10. 30 மணி முதல் மாலை 4 மணி வரை அணுகி பயன் பெறலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 58 மற்றும் பதிவு கட்ட ணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 60 செலுத்தி விண் ணப்பிக்கலாம். இவ்வாறு கல்லூரி முதல்வர் ராமலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி