ALERT: நீலகிரியில் கனமழையால் மஞ்சள் எச்சரிக்கை

73பார்த்தது
ALERT:  நீலகிரியில் கனமழையால் மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 12) 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 

வடக்குஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 12) கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி