நீலகிரி: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் கைது

58பார்த்தது
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்சியினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து இன்று அதிமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகரச் செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் தடையை மீறி அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். அதிமுகவின் போராட்டம் காரணமாக உதகை ஏடிசி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி