சுற்றுலாத் தலங்களில் ஒரே நாளில் 18590 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களை கண்டு களித்துள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் இதமான காலநிலை நிலவுவதாலும் கிறிஸ்மஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை தாவரவியல் பூங்காவை 12477 பேரும், ரோஜா பூங்காவை 3 ஆயிரம் பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவை 2202 பேரும், தேயிலை பூங்காவை 499 பேரும், காட்டேரி பூங்காவை 412 பேரும் என மொத்தம் 18590 பேரும் கண்டு களித்துள்ளனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக புதுகையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.