சென்னை: படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படுவோர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு 10 அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி/தோல்வி, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்றவை படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்த நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கக் கூடாது, சுயதொழிலில் ஈடுபடக் கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குக் குறைவாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.