நீலகிரி: கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்

52பார்த்தது
நீலகிரி: கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 11) 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாலை அல்லது இரவில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி