புல்லட்டு உன்னால ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது டா..!

68பார்த்தது
புல்லட்டு உன்னால ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது டா.!

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் வீடுகளை சேதப்படுத்திய புல்லட் ராஜா யானையை வனத்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்த போது புதருக்குள் ஒளிந்துக் கொள்ளும் காட்சி சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு சேரம்பாடி சுற்று பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் ராஜா காட்டு யானையின் ட்ரோன் கேமரா மூலம் தேடி வரும் வனத்துறையினர் மற்ற காட்டு யானைகளின் கூட்டத்தின் நடமாட்டத்தை பதிவு செய்து அந்த கூட்டத்தில் புல்லட் ராஜா காட்டு யானை உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் புல்லட் ராஜா காட்டு யானையை ட்ரோன் கேமரா மூலம் தேடி வரும் வனத்துறையினரிடம் இருந்து புதருக்குள் ஒளிந்து கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி