பந்தலுார் அருகே தொண்டியாளம், மேங்கோரேஞ்ச் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும், யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் பகல் நேரத்தில், கட்டை கொம்பன் மற்றும் புல்லட் என்று அழைக்கப்படும் இரண்டு யானைகள் உலா வருகின்றன. இரவு நேரத்தில் மேலும் ஒரு ஆண் யானையுடன் சேர்ந்து, மேங்கோரஞ்ச் எஸ்டேட் மற்றும் தொண்டியாளம் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
நேற்றைய தினம், இந்த யானைகள் தொண்டியாளத்தை சேர்ந்த, சந்திரன் மற்றும் சைனி ஆகியோரின் கார் சேதப்படுத்தின. மேலும் ஷைனி என்பவரின் வீட்டு வாசலுக்கு சென்ற யானை அங்கிருந்தவர்களை துரத்திய போது, மக்கள் ஓடி தப்பினர். தொடர்ந்து, வனத் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானைகளை விரட்டினர்.