நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சம்பவதினத்தன்று உணவை தேடி காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அங்கிருந்த தென்னை மரத்தை யானை முறித்து கீழே சாய்த்தது. இதில் மரம் அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாயந்து காட்டு யானை சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறஇத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.