நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி அருகே உள்ள மாயார் பாலம் பகுதியில், காட்டில் நடைபயிலும் புலியின் அதிரடியான வேட்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன
இரவு நேரத்தில்க ஒரு மான் தன்னை காப்பதற்காக கடந்து ஓடும் தருணத்தில் புலி பாய்ந்து அதனை வேட்டையாடும் காணொளி, அசலான காட்டுச்சுற்றுலாவின் அதிர்ச்சியூட்டும் தருணங்களை நினைவுபடுத்துகிறது.
மாயார் பாலம் பகுதியில் இந்த பரபரப்பு காட்சிகள் பதிவாகி உள்ளது இது சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி வனவலயங்களை இணைக்கும் முக்கியமான வனப்பகுதியாகும்.
இரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற அந்த ஊரில் வசிக்கும் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மான் ஒன்றை குறி வைத்து பாய்ந்து பிடித்து வேட்டையாடி வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இது வனவிலங்கு உலகின் இயற்கை சுழற்சி எப்படி வேலை செய்கிறது என்பதற்கான ஒரு நேரடி சான்றாகவும் அமைகிறது.
வனத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில் இது காட்டில் இயற்கையாக நடைபெறும் வேட்டைக்காட்சியாகும் இரவு பல் நேரங்களில் மாயார் பாலம் பகுதியில் வாகனங்களில் சாலையை கடக்கும்போது, விலங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து மெதுவாக செல்ல வேண்டும் என்பதே வனத்துறையின் எச்சரிக்கை.