"அப்போ எனக்கு பசிக்கும் இல்ல". மின் வேலியை சாய்த்து உணவு சாப்பிட சென்ற காட்டு யானை.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகல் முக்கியமான உயிர் சூழல் மண்டலமாக கருதப்படுகிறது. இந்த வனப்பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. அதிலும் யானை புலி சிறுத்தை கரடி போன்ற பல்வேறு உயிரினங்களும் வசித்து வருகிறது.
மனிதர்கல் மட்டுமே அறிவு சார்ந்த பல்வேறு செயல்களை செய்கிறார்கள் என என்னும் நிலையில் இந்த காட்டு யானை எங்கு சென்று B. Tech படித்தது என்று தெரியவில்லை. மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலத்தில் அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போஸ்ட்டை கீழே தள்ளி விவசாய நிலத்திற்குள் செல்ல முயற்சிக்கிறது.
தொடர் மழையின் காரணமாக வனப்பகுதி மற்றும் வனங்களை ஒட்டி உள்ள பகுதிகளிலும் பசுமை திரும்பி உள்ளதால் வன உயிரினங்கள் விவசாய நிலங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கூடலூர் மெல்லியாலம் பகுதியில் காட்டு யானை விவசாய நிலத்திற்குள் விண்வெளியை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.