மரத்தின் பட்டையை உரித்துஉணவு உண்ட கரடி சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் மாயர் மசனகுடி சாலையில் தொடர் மழை காரணமாக பசுமையாக காட்சியளிப்பதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலை ஓரங்களில் உலா வருவது வாடிக்கையாகியுள்ளது
இந்நிலையில் மசனகுடி மற்றும் மாயர் பகுதிகளில் சாலையில் கரடி ஒன்று சாலையோரம் இருந்த மரத்தின் பட்டையை உரித்து உன்ன முயற்சித்தது இந்த காட்சி அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் சாலை ஓரத்தில் வாகனத்தில் செல்லும்போது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.