கூடலூர், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்தேகப்படும் இடங்களில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பேரூராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான இருவரிடம் விசாரணை நடத்தி அவர்களது வீடுகளில் சோதனை செய்த போது மான் கொம்பு மேலும், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள், மான் கொம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், மான் கொம்பு, துப் பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த உதயகுமார் (40), கோவிந்தராஜ் (47), ஆகிய இருவரையும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் வன விலங்கு வேட்டைக ளில் ஈடுபட்டனரா? என் பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.