உதகை நகரில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி.
உதகை நகரில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி.
சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் அன்றாட தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் உதகை மார்க்கெட் பகுதிக்கு வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சேரிங்கிராஸ், ஏடிசி, மத்திய பேருந்து நிலையம், கமர்சியல் சாலை, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி கட்டுப்பாட்டில் கட்டண கழிப்பிடங்கள் செயல்பட்டு வந்தன.