தமிழ்நாடு அரசு கொறடா கா. ராமச்சந்திரன் பேட்டி

83பார்த்தது
கலைஞரின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 100% கல்வி பெற்ற மாவட்டமாக மாவட்டம் திகழ்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 57 மாணவர்கள் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு கொறடா கா. ராமச்சந்திரன் விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி பேட்டி பேட்டி.

அரசு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கொறடா கா. ராமச்சந்திரன் கலந்துகொண்டு விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 412 அரசு பள்ளிகளில் பயிலும் 33, 706 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலைஞரின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 100% கல்வி பெற்ற மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது எனவும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 57 மாணவர்கள் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அதில் 51 பேர் அரசு கல்லூரிகளில் பயின்றவர்கள் எனவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி