சாதி சான்று கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

65பார்த்தது
உதகை உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மலை வேடன் பழங்குடியின மக்கள், சாதி சான்று கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டும் போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர்..

உதகையில் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமரம், தட்டனேரி, பழங்குடியின மக்களின் பெற்றோர்களுக்கு சாதி சான்று உள்ள நிலையில், 1995 முதல் பழங்குடியின சாதி சான்று வழங்காததால் தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தும் பயன் இல்லை என்று கூறி 70 ற்கும் மேற்பட்ட தங்களது குழந்தைகளை பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந் நிலையி்ல் நேற்று மாலை முதல் இந்த கிராமத்தில் உள்ள நூற்று கணக்கான வீடுகளில் கருப்பு கெடி கட்டி தங்களது எதிர்பை பதிவு செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி