நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மசினக்குடி வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்த அதிகளவிலான பிளாஸ்டிக் பாட்டல்கள், கவர், மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மசினகுடி சோதனை மையத்தில் சோதனையில் பறிமுதல் செய்கின்றனர்
மசினகுடி நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி வாயிலாக வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன
. கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை மீறி, பிளாஸ்டிக் பாட்டல்கள், டிஸ்போசபிள் கப், பேக்கேஜிங் மேட்டீரியல் போன்றவற்றை அதிக அளவில் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது சாலையோரம் குவிந்து கிடப்பது சூழலியல் வல்லுநர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது.