நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடந்தது.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்று மாணவர்களை தேர்வு செய்தனர். முகாமில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டதில், 812 மாணவமாணவிகள் பதிவு செய்தனர். இதன்படி நடந்த முகாமில் 556 மாணவர்கள் பங்கு பெற்றனர்.
முகாமில், மொத்தம் 334 மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு பெற்றனர், இதேபோல் வேலைவாய்ப்பு முகாம்கள் கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.