காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

83பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் பிதர்காடு அருகே சந்தக்குன்னு பகுதியைச் சேர்ந்த ஜோஸ் ஆண்டனி (வயது 60) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதர்காடு அருகே அமைந்துள்ள சந்தகுன்னு பகுதியைச் சேர்ந்த ஜோஸ் ஆண்டனி (வயது 60) இரவு நேரம் தனது வீட்டிலிருந்து தேயிலை தோட்டத்தின் வழியாக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை ஜோஸ் ஆண்டனியை தாக்கியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் தகவல் அளித்தும் காட்டு யானையை விரட்டி ஜோஸ் ஆண்டனியை யானையிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் உடல் கைப்பற்றப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி