கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்

75பார்த்தது
கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்
கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொண்ணுவயல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுனில், நேற்று காலை இவரது தோட். டத்தில் பெரிய சிறுத்தை ஒன்று நடமாட முடியாத நிலையில் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அப்ப குதி மக்கள் பார்த்துள்ள னர். சிறிது நேரம் அங் கேயே இருந்த சிறுத்தை பொதுமக்களை பார்த்த தும் அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. இதனை அடுத்து வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலை மையில் வனத்துறையி னர் விரைந்து வந்து சிறுத் தையை தேடினர். பல இடங்களில் தேடியும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், வனத்துறையினர் இரவிலும் சிறுத்தையை கண்காணிக்க ஒருகுழுவை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுத்தை தென்பட்டால் அதன் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி