பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு

51பார்த்தது
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் நகராட்சி கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்ட கோத்தகிரியில் சிறப்பு நிலை பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அண்மையில் தமிழக அரசு பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது அதில் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி முதல் ஆணையராக மோகன்குமார் என்பவரை நியமிக்கப்பட்டு இன்று நகராட்சியின் முதல் கூட்டம் 21 நகர் மன்ற உறுப்பினர்களுடன் கூட்டம் தொடங்கியது பல்வேறு முறைகேடுகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றது
அப்பொழுது செய்தி சேகரிக்கு சென்ற பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முறைகேடு குறித்து கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி