நூலிலையில் உயிர் தப்பிய பாகன் பரபரப்பான காட்சிகள்....

60பார்த்தது
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள உணவு மாடத்தில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் போது பாகன் மற்றும் காவடியை திடீரென தாக்கிய வளர்ப்பு யானை, நூலிலையில் உயிர் தப்பிய பாகன் பரபரப்பான காட்சிகள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவது வழக்கம். இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் யானைகளை அதன் பாகன்கள் அழைத்து வந்து வரிசையில் நிற்க வைத்து உணவு வழங்க தயார் படுத்தியபோது, அங்கிருந்த யானை திடீரென சுரேஸ் பாகன் மற்றும் காவடியை தாக்கியது. இதில் நிலைகுலைந்த பாகன் கீழே விழுந்து நூலிலையில் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் வளர்ப்பு யானையே பாகன் மற்றும் காவடியை தாக்கும் பரபரப்பான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி