நீலகிரியில் தொடரும் புலிகள் மரணம் ஆர்வலர்கள் அதிர்ச்சி
முதுமலைபுலிகள் காப்பகம். மசனகுடி வனக்கோட்டம். சீகூர் வன சரகம் பகுதியில். வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வயது வந்த ஆண் புலி இறந்து கிடந்தது கண்டறியபட்டது
அதன் உடல் பாகங்கள் அப்படியே இருந்தன இதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் பாதுகாவலர் கிருபாசங்கர். அறிவுறுத்தலின் பேரில். மசனகுடி வன கோட்ட துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவின் படி. NTCA. நெறிமுறையின் படி. மருத்துவக் குழு. புலியின் பிரத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சீகூர் வனத்துறை ரேஞ்சர் தேவ்ஆனந்த் தெரிவித்தார்
பைக்காரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு புலி இறந்த நிலையில் தற்போதுசீகூர் பகுதியில் ஒரு புலிஇறந்துள்ளது வன ஆர்வலர்கள் இடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது