தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்

2274பார்த்தது
தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்
ஊட்டிக்கு தினமும் ஏராமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இதில், கோடை விடுமுறையின் போது, அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், ஆண்டு தோறும் கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவை தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.

கோடை சீசன் நெருங்கிய நிலையில் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் மற்றும் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக தற்போது பெரிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளும் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்த வேகத்தில் பூங்காவை சுற்றிப்பார்த்து விட்டு செல்ல வேண்டிய நிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி