சாலையில் உலாவரும் செந்நாய் கூட்டம்

0பார்த்தது
நீலகிரி


உதகை அடுத்த அவலாஞ்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக தென்படும் செந்நாய்கள் அச்சத்தில் பொதுமக்கள்.
இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி செந்நாய், புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வர துவங்கியுள்ளன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றியுள்ள நகரப் பகுதிகள் பெரும்பாலும் வனத்தை ஒட்டியே அப்பகுதிகள் அமைந்துள்ளன

உதகையிலிருந்து அவலாஞ்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட செந்நாய்கள் பகல் நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக சாலையில் உலா வருகிறது இந்த செந்நாய் கூட்டம் மனிதர்கள் மற்றும் வாகனங்களை பார்த்துநின்று கொண்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி