தடுப்பு சுவர் இடித்த ஒற்றை ய யானை

66பார்த்தது
கூடலூரில் அதிகாலை சாலையோர தடுப்பு சுவரை இடித்து குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு, குடியிருப்பு வாசிகள் சத்தம் எழுப்பி யானையை அப்பகுதியில் இருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் உள்ள பலா மரங்களில் காய்த்துள்ள பலாபழங்களை ருசி பார்க்க காட்டு யானைகள் குடியிருப்புகளின் அருகே உலா வருவது அதிகரித்துள்ளது. அதேபோல் நடுக்கூடலூர் பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையோர தடுப்பு சுவரை இடித்து உணவு தேடி குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் குடியிருப்பு வாசிகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சத்தம் எழுப்பி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் யாரும் வெளியே வராததால் பெரும் அசம்பாவிதமானது தவிர்க்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி